பாரத சாரண சாரணியம் திருமங்கலம் கல்வி மாவட்டம் - பொதுக்குழு கூட்டம் நிகழ்வுகள்
தமிழ்நாடு,
பாரத சாரண சாரணியம் மதுரை மாவட்டம், திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் 19.12.2018 அன்று
புதன்கிழமை திருமங்கலம் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை ஆணையரும்
மற்றும் மாவட்டக் கல்வி அலுவலருமான திருமதி.M.கஸ்தூரி அவர்களின் தலைமையில் பொதுக்குழு
கூட்டம் நடைபெற்றது.
இப்பொதுக்குழு கூட்டத்தில் இந்த ஆண்டிற்கான
செயல்திட்டங்கள் பற்றி மாநில சாரண பிரதிநிதி மற்றும் திருமங்கலம் கல்வி மாவட்டத்தின்
சாரண பயிற்சி ஆணையருமான திரு.K.நாராயணன் அவர்கள் இயக்கச் செயல்பாடுகள் பற்றி விளக்கம்
அளித்தார். திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களை மாவட்ட
சாரண ஆணையர் திரு.P.ஆதிநாராயணன் அவர்களால் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் திருமங்கலம் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி.S.சியாமளா
அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட முதன்மை ஆணையர்
அவர்கள் சென்ற வருடம் சாரணியப் பிரிவில் வனக்கலை பயிற்சி முடித்த திருமங்கலம் லிங்கா
மெட்ரிகுலேசன் பள்ளி சாரணிய ஆசிரியை திருமதி.B.குகமீனாட்சி அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
திருமங்கலம் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாரண ஆசிரியர் திரு.K.பிரேம்குமார் அவர்கள்
நன்றி கூறினார். இறுதியில் நாட்டுப்பண்ணுடன் பொதுக் குழுக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
Comments
Post a Comment